நீதிமன்றங்கள் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால், சட்டமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? சீமான் கேள்வி..? - Seithipunal
Seithipunal


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா நடைபெற்றது. திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள முத்தரையரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பசி பட்டினி, திருட்டு, முறையற்ற நிர்வாகம், மணல் கொள்ளை போன்றவற்றையே கொள்கையாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்டிகள் கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த இரு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என்றும்,  பா.ஜ.க. கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கொடிகளில்தான் வேறுபாடு உள்ளது. கொள்கையில் வேறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன்,  இவர்களுக்கு மாற்று அவர்களை கூறுவது சரியல்ல என்றும், இதை நம்பி ஏமாறுவதுதான் பெருத்த ஏமாற்றம் என்றும் அவர் பேசியுள்ளார்.

அத்துடன், அமலாக்கத்துறை சோதனை வந்ததால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார் என்றும், 03 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்தாண்டு செல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், நாட்டில் நீதிமன்றங்கள் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால், சட்டமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? அவற்றை கலைத்து விடலாம் என்று சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If the courts make all the decisions then what is the purpose of the legislature What is the purpose of the parliament Seeman question


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->