சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு நீதிமன்ற காவல்..கோர்ட்டு அதிரடி! - Seithipunal
Seithipunal


சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதுண்டு.இதையடுத்து, சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.சமீபகாலமாக லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கி சூடு தாக்குதலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் , பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் கடந்த 20ம் தேதி அதிகாலை த்துமீறி நுழைய முயன்ற இஷா சாம்ரா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட இஷா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில்அடைக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இஷா சாம்ராவிடம் மும்பை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court protection for the woman who tried to enter Salman Khans house Court takes drastic action


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->