ரவி மோகன் – ஆர்த்திக்கு செக் வைத்த நீதிமன்றம்!
Ravi Mohan Kenisha Francis Aarti court order
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான திருமண உறவுப் பிரச்சனை கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்குரியதாக இருந்து வந்தது.
ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி மூன்று முறை மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருவரும் நேரில் ஆஜராக, தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர். ரவி மோகன், சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், விவாகரத்துக்கு உடன்படுகிறார் என்றும் கூறினார்.
இதையடுத்து, ஆர்த்தி தரப்பில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி தனி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இருவரும் ஊடகங்களுக்கு எந்தவொரு அறிக்கையும் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. பிரச்சனை தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டாம் எனவும், விசாரணை நிறைவு பெறும் வரை அமைதியாக இருக்க இருதரப்பும் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
English Summary
Ravi Mohan Kenisha Francis Aarti court order