டாஸ்மாக் நிறுவனத்தை முடக்கும் விதத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளது: அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் மட்டுமல்ல, அரசின் எந்த துறையிலும் தவறு நடக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகவுள்ளார் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நடந்த அரசு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம்  கூர்ந்து கவனித்து, சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.  டாஸ்மாக் மட்டுமல்ல, அரசின் எந்த துறையிலும் தவறு நடக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகவுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை நடத்திய விதம் வருத்தத்திற்குரியது என்றும், டாஸ்மாக் நிறுவனத்தை முடக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்கு நியாயம் இருப்பதை, உச்சநீதிமன்றம் உத்தரவு காட்டுகிறதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அரசியலமைப்பு சட்டம்தான் எல்லாவற்றிற்கும் உயர்வானது என்பதை இந்த உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது என்றும்,  டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தவறான அணுகுமுறை என்றும், அமலாக்கத்துறை கூறும் அளவுக்கு தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Enforcement Directorate is taking action to shut down TASMAC Minister Muthusamy alleges


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->