அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவானார் மாதம்பட்டி ரங்கராஜ்...! - ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராமில் அதிரடி அறிவிப்பு...! 
                                    
                                    
                                   Madhampatti Rangaraj becomes father beautiful baby boy Joy Crisilda makes dramatic announcement Instagram
 
                                 
                               
                                
                                      
                                            சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா “திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றினார்” என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது கடந்த மாதங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, அக்டோபர் 16ஆம் தேதி, சேப்பாக்கில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் முன் ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் நேரில் ஆஜராகினர்.அப்போது, ஜாய் கிரிசில்டா தரப்பில் இருந்து ரங்கராஜ் மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீசில், “24 மணி நேரத்திற்குள் உங்கள் அறிக்கையை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனையடுத்து, ஜாய் கிரிசில்டா நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அதில், “நான் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளேன்; மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.6.5 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க ரங்கராஜ் மீது உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது” என பதிவிட்டு, நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Madhampatti Rangaraj becomes father beautiful baby boy Joy Crisilda makes dramatic announcement Instagram