டொயோட்டா கார்களுக்கு தள்ளுபடி!டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்! லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Discounts on Toyota cars This is the right time to buy a Toyota car A great opportunity to save lakhs
2026 பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 2025 மாடல் கார்களுக்கு ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வேரியன்ட் மற்றும் இன்ஜின் வகையைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.80,000 வரை பயன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா கிளான்ஸா (2025) மாடலுக்கு ரூ.40,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.10,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக லாயல்டி போனஸும் கிடைக்கும். மொத்தத்தில் ரூ.80,000 வரை சலுகை கிடைக்கிறது.
டைசர் (2025) டர்போ MT வேரியண்ட்டில் ரூ.12,500 ரொக்கத் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.3,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.25,500 வரை சலுகை கிடைக்கும். டர்போ அல்லாத வேரியண்ட்டில் ரூ.12,500 ரொக்கத் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.3,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.35,500 வரை சலுகை வழங்கப்படுகிறது. இரு வேரியண்ட்களுக்கும் லாயல்டி போனஸ் பொருந்தும்.
ஹைரைடர் (2025) ஹைப்ரிட் வேரியண்ட்டுக்கு ரூ.28,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.6,500 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.74,500 வரை பயன் கிடைக்கும். சிஎன்ஜி வேரியண்ட்டுக்கு ரூ.45,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.4,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.74,000 வரை சலுகை கிடைக்கும். G மற்றும் V நியோடைரவ் வேரியண்ட்டில் ரூ.51,000 வரை, S நியோடைரவ் வேரியண்ட்டில் ரூ.45,500 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கும் லாயல்டி போனஸ் வழங்கப்படும்.
மேற்கண்ட தள்ளுபடிகள் நகரம், டீலர்ஷிப், ஸ்டாக் நிலை, நிறம் மற்றும் வேரியண்ட் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். எனவே கார் வாங்க விரும்புபவர்கள் அருகிலுள்ள டொயோட்டா டீலரை தொடர்புகொண்டு முழு விவரங்களையும் உறுதிப்படுத்துவது நல்லது. பிப்ரவரி மாத சலுகைகள் புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
English Summary
Discounts on Toyota cars This is the right time to buy a Toyota car A great opportunity to save lakhs