அப்துல் கலாம் பயோபிக் படத்தில் தனுஷ்...!
Dhanush in Abdul Kalam biopic movie
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேகர் கர்முலா இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, தனுஷ் அவர்களே இயக்கி நடித்துள்ள ''இட்லி கடை'' படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.இதுகுறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், இப்படத்தை 'ஆதிபுருஷ்' திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி, அப்துல் கலாம் பயோபிக் படம் அவர் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dhanush in Abdul Kalam biopic movie