முறைகேடு புகார்: ஓய்வு பெற இருந்த நாளில் அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'..!
Former Anna University Vice Chancellor suspended on day of retirement
அண்ணா பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய வேல்ராஜ், அவரது மூன்றாண்டு பதவி காலம் முடிந்தாலும், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அவர் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
குறித்த வழக்கை காரணம் காட்டி, இன்று ஓய்வு பெற இருந்த துணைவேந்தர் வேல்வராஜ். 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary
Former Anna University Vice Chancellor suspended on day of retirement