முடிவுக்கு வரும் ராணுவ ஆட்சி: 04 ஆண்டுகளுக்கு பின் மியான்மரில் தேர்தல்..!
Elections in Myanmar after 4 years of military rule
மியான்மரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு நடந்து வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2020-இல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி மோசடி செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராணுவம் குற்றம் சாட்டியது.

அத்துடன், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, 2021 பிப்ரவரியில் கவிழ்த்தது. அதனை தொடர்ந்து அங்கு அவசரநிலையை ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அறிவித்து அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியான்மர் மக்கள் பல மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறையில் அடைத்தும் ராணுவம் ஒடுக்கியது. இந்த நடவடிக்கைகளில் மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதன் பின் அரசு நிர்வாகம், நீதித்துறையை ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன், கடந்த, 2024-இல் தற்காலிக அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவில் மின் ஆங் ஹிலியாங் கையெழுத்திட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குள் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Elections in Myanmar after 4 years of military rule