ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்!
Congress Rahul Gandhi Election poll EC
தேர்தல் ஆணையத்தால் மக்களின் வாக்குகள் திருடப்படுகின்றன என்ற ம்மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளை திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது தேசத்துரோக செயல் என்றும் கூறினார். மேலும், இது மூலம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அச்சுறுத்தல்களைக் குற்றம் உணராமல் புறக்கணிக்கின்றோம்.
தேர்தல் அதிகாரிகள் அனைவரும் சட்ட விதிகளை பின்பற்றி, நேர்மையுடன் செயல்படுகிறார்கள். ஆதாரமின்றி கூறப்படும் பொறுப்பற்ற பேச்சுகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
எனவே, பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் இவ்வகை அறிக்கைகளை புறக்கணிக்க வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளது.
English Summary
Congress Rahul Gandhi Election poll EC