தேசிய நெடுஞ்சாலையில் பரிதாபம்...! - பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்...!
Tragedy National Highway 4 Dead Bus Accident Many Seriously Injured
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. பேருந்தில் மொத்தம் 36 பேர் பயணம் செய்திருந்தனர்.
இரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.நிஜாமாபாத் அருகே கன்னாராம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, டிரைவர் தூக்கத்தில் மயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. மேலும், திடீர் விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் அலறி உதவி கோரி கத்தினர்.அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த கிராம மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலறிந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சில நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் காவலர்கள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy National Highway 4 Dead Bus Accident Many Seriously Injured