நெல்லையில் பெரும் கொடூரம்! பாலியல் புகார் அளித்த மாணவிக்கு TC கொடுத்த தனியார் பள்ளி - கொந்தளித்த மக்கள்!
Nellai School Student abuse TC
திருநெல்வேலியில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு எதிராக புகார் அளித்ததால் மாணவிக்கு TC கொடுத்த பெரும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த ஓட்டுநர் மாணவியை மிரட்டியும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், டிசி பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, மாணவிக்கு ஆதரவாக பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை சமாளிக்க முயன்றனர். விசாரணையில், மாணவியிடம் ஓட்டுநர் பலவந்தமாக நடந்துகொண்டது உறுதியாகும் வகையில் ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Nellai School Student abuse TC