பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு: பங்கேற்க விரும்புவதாக உறுதி..!
PM Modi confirms his desire to participate in Bhagwan Sri Sathya Sai Babas centenary celebrations
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமையிலான நிர்வாகிகள் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளனர். இதன் போது பிரசாந்தி நிலையம் வந்து, பகவான் சத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும், அவரின் ஆசியை பெற விரும்புவதாக பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
சத்யசாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் தலைமைமையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்.எஸ்.நாகானந்த், ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா ஆகியோர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சென்று மோடியை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது. இதன் போது, பகவான் சத்யசாய்பாபாவுடன் மறக்க முடியாத தனது நினைவுகளை மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடியிடம், அறங்காவலர்கள் விளக்கியதுடன், இந்த விழாவில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதற்கு பிரதமர் மோடி பிரசாந்தி நிலையம் வந்து பகவானின் ஆசியை பெறவும், நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் விரும்புவதாக உறுதியளித்துள்ளார்.
English Summary
PM Modi confirms his desire to participate in Bhagwan Sri Sathya Sai Babas centenary celebrations