எதிர்கட்சிகளின் வார்த்தைகள், இந்தியாவின் கண்ணியத்தை சேதப்படுத்துகிறது, அமெரிக்க நலன்களுக்கு சாதகமாக இருக்கிறது: பவன் கல்யாண் குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


அனைத்து குடிமக்களுக்கும் நெகிழ்ச்சியான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதில் என்டிஏ அரசு கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது என்றும் இதனை குறைத்து மதிப்பிடும் எதிர்கட்சிகளை கண்டித்தும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

அதாவது, சிறு,மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மருந்து மற்றும் விவசாயம் ஆகியவற்றை வலுப்படுத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது 04-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலுவாக செயல்படுகிறதாகவும், இந்த அரசு தேசிய நலன்களைப் பாதுகாப்பதோடு,  சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தோ-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் கவனக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கட்சிகளின் வார்த்தைகள், இந்தியாவின் கண்ணியத்தை சேதப்படுத்துவதாகவும் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து இந்தியாவின் உலகளாவிய நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கவனக்குறைவான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும்,  அவர்கள் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய இந்தியா, புதிய இந்தியா, இனி தலைவணங்கும் நாடு அல்ல என்றும், தெளிவுடன் பேசி, தேசிய நலன்களுக்காக செயல்படும் நாடு என்றும் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல், அனைத்து குடிமக்களுக்கும் நெகிழ்ச்சியான, தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதில் என்டிஏ அரசு கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது என்றும் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pawan Kalyan accuses opposition parties of damaging India's dignity and favouring US interests


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->