Video: சென்னையை யாருக்கு தாரை வார்க்க போகிறீர்கள்? சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றம்! கொந்தளிக்கும் ஜெயக்குமார்!
ADMK Jayakumar condemn to DMK Govt Chennai
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றி விட்டு சென்னையை யாருக்கு தாரை வார்க்க போகிறீர்கள்?
இராயபுரம்-பேசின் பிரிட்ஜ் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை இடித்து-உடைமைகளை அள்ளி வீதியில் வீசியுள்ளது இந்த மக்கள் விரோத அரசு!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திமுக அரசும்-சட்டமன்ற உறுப்பினரும் மக்களை தவிர மீதி அனைவருக்கும் நல்லது செய்கின்றனர்.
இராயபுரத்திற்கு சம்பந்தமே இல்லாத பகுதி மக்களிடம் பணம் பெற்று வீடுகளை ஒதுக்கி சொந்த மண்ணின் மக்களை விரட்டியடிப்பதா?
உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தற்போது தேவையான அடிப்படை வசதிகளையும்-அதே பகுதியில் உடனடியாக வீடுகளையும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் மக்களை திரட்டி போராடக் கூடிய சூழ்நிலை உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar condemn to DMK Govt Chennai