ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின்: ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக செய்தி: நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு..!
Nellai Metropolitan Police Department denies reports that the murdered poet Kasipandian threatened them
நெல்லையில் காதல் விவகாரம் தொடர்பாக காதலின் சகோதரன் காதலன் கவினை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினை ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், கவினிடம் எந்த சட்ட விரோதமான விசாரணையும் செய்யவில்லை என்றும், காசிப்பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை சந்திரசேகரன் பேட்டியில் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதுஎன நெல்லை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இது தொடர்பான வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஒரு செய்தி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில், ஆணவக்கொலை கட்ட பஞ்சாயத்து..? நெல்லையில் நிகழ்ந்த ஜாதி ஆணவ கொலையில் பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது புகார் கை, கால்களை உடைத்து விடுவேன் என கூறி மிரட்டிய ஒரே வாரத்தில் கொலை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு என்ற செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Nellai Metropolitan Police Department denies reports that the murdered poet Kasipandian threatened them