கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற நாளில் 17 கி.மீ., தூரம் ஓடியே வீட்டுக்கு சென்ற எஸ்எஸ்ஐ: குவியும் பாராட்டு..!
SSI ran 17 km home on retirement day in Kanyakumari
பொதுவாக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடைசி நாள் அன்று, பாராட்டு விழா நடத்தி கவுரவித்து காரில் அழைத்து வந்து விடுவது வழக்கம். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இது செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற நாளில் 17 கி.மீ., ஓடிய படியே வீட்டுக்கு சென்றடைந்துள்ளார்.
கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு 1984-இல் போலீசில் பணியில் சேர்ந்த அவர் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மை மற்றும் பணி காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டையும், பொது மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அவருக்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தில் எப்போதும் ஆர்வம் கொண்டவர்.
அத்துடன், கோட்டூர் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றிய அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும், வழக்கப்படி, அங்கிருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள கன்னியாகுமரி அடுத்த பூவியூரில் உள்ள வீட்டில் ஜீப்பில் அழைத்து செல்ல அதிகாரிகள் தயாராக இருந்துள்ளனர்..
ஆனால், அவர் அதனை ஏற்க பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். அப்போது அவர் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்கு ஓடிச் செல்வதாக கூறியுள்ளார். அதன்படி, போலீஸ் ஸ்டேசனில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு ஓடிய படி சென்றுள்ளார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
English Summary
SSI ran 17 km home on retirement day in Kanyakumari