இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜெர்மனி..! - Seithipunal
Seithipunal


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அதன்படி, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ள ஜெய்சங்கர் இன்று ஜெர்மனிகு விஜயம் மேற்கொண்டார். இதன் போது ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் வெல்பலை அவர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினயுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் கூறுகையில், ஏப்ரல் 22-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதை நாங்கள் ஆதரிப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Germany has expressed support for Indias Operation Sindoor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->