மதுரையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்! நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! பரபரப்பில் திமுக வட்டாரம்!
DMK meet madurai plan
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் மட்டுமே இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் திட்டமிடல் குறித்து முக்கிய ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சியின் பெரிய அளவிலான ஒன்றியங்களை பிரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பிரிவுகள் தொடர்பான புகார்களும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அரசு சாதனைகளை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்க உள்ளார்.
மிக முக்கியமாக அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.