பழனியாண்டவனின் அருள்.. இது வெற்றிவிழா கூட்டம் - தமிழக முதல்வர் வெற்றிக்கொடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


யார் இறைவன் இல்லை என்று சொன்னாரோ?, அவரின் (மு.க ஸ்டாலின்) கையிலேயே வேலினைக்கொடுத்து பிடிக்க வைத்துவிட்டான் முருகன் என்று தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது தமிழக முதல்வர் பேசுகையில், " திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை மு.க ஸ்டாலின் செய்து வருகிறார். மு.க ஸ்டாலின் எந்த பிரச்சாரம் செய்தாலும், எங்களை வீழ்த்த முடியாது. 

இங்குள்ள முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ள பழனியில் அதிமுகவிற்கு மாபெரும் கூட்டம் உள்ளது. இந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு தேர்தல் வெற்றிவிழா போல தோன்றுகிறது. இதனை நான் வெற்றிவிழா கூட்டமாகவே நான் கருதுகிறேன். 

அதிமுகவிற்கு மக்கள் அளிக்கும் ஆதரவால், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரக்குறைவான விமர்சனத்தை செய்து வருகிறார். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சென்ற மு.க ஸ்டாலின் நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறை அழித்துவிட்டார். பசும்பொன் முத்தரலிங்கத்தேவர் ஜெயந்திற்கு சென்ற மு.க ஸ்டாலின் திருநீறை அளித்தார்.

தற்போது வேலினை பிடித்துவிட்டார். இதெல்லாம் பழனிமலை முருகனின் சக்தி. அவதூறு பரப்பி, இறைவனே இல்லை என்று சொன்னார் மு.க ஸ்டாலின். யார் இறைவன் இல்லை என்று சொன்னாரோ?, அவரின் (மு.க ஸ்டாலின்) கையிலேயே வேலினைக்கொடுத்து பிடிக்க வைத்துவிட்டான் முருகன் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Palani TN CM Edappadi Palanisamy Election Campaign 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->