காதலர் தினத்தில் மாணவிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கல்லூரி நிர்வாகம்.! உஷாரான பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. கூட்டம் கூட்டமாக கடற்கரை, பூங்காக்கள் என்று காதலர்கள் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று கல்லூரி வேலை நாள் என்பதால் கல்லூரி முடிந்தவுடன் மாணவிகள் காதலனுடன் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. எனவே, இதனை தடுக்கும் பொருட்டு கடலூரில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று பெற்றோர்களுக்குலர்ட் மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு இருக்கின்றது. 

கல்லூரி அனுப்பிய அந்த குறுஞ்செய்தியில், "கல்லூரி நேரம் ஒரு மணிக்கு முடிகின்றது. எனவே, தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர்கள், கல்லூரிக்கு 12.55 மணிக்கெல்லாம் வந்து அழைத்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முடிந்தவுடன் கல்லூரி மாணவிகள் தங்களுடைய ஆண் நண்பருடன் வெளியே ஊர் சுற்ற கூடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக பெற்றோர்களுக்கு இந்த செய்தியை தட்டிவிட்டு இருக்கின்றது. இதன் காரணமாக காதலருடன் காதலர் தினத்தை கொண்டாட நினைத்த மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore College administration shocked students on Valentine's Day


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal