சிதம்பரம்: 30 வயது ஸ்கூல் வாத்தியின் ஒருதலைக்காதல்.. 18 வயது கல்லூரி மாணவி கொலை முயற்சி..! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர், மாணவியை கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியை சார்ந்தவர் புனிதா (வயது 18). இவர் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்துறையில் முதல் வருடம் பயின்று வருகிறார். 

கல்லூரி அருகேயுள்ள விடுதியில் இருந்து மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்க மாணவி வெளியே வந்திருந்த நிலையில், விடுதிக்கு அருகேயிருக்கும் மருத்துவ குடியிருப்பு அருகே மாணவி நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, எதிரே வந்த கொடூரன் மாணவியை ஆபாசமாக பேசி திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளான். இதனால் மாணவி அலறித்துடித்த நிலையில், இவரின் சத்தம் கேட்டு வந்த காக்கும் பக்கத்தினர் வாலிபரை பிடிக்க முயற்சித்துள்ளனர். 

அந்த கொடூரனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான். இதனையடுத்து இருவரையும் மீட்ட பொதுமக்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பள்ளூர்படை கிராமத்தை சார்ந்த கொடூரன் பிரான்சிஸ் சேவியர் (வயது 30) என்பதும், இவன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறான் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், மாணவி புனிதா தனியார் பள்ளியில் படித்து வருகையில், அவரை காமுகன் ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதன்பின்னர், மாணவி மேல் படிப்புக்காக சிதம்பரம் வந்துவிட்ட நிலையில், இதனை எப்படியோ அறிந்த கொடூரன் கொலை செய்யும் முயற்சியோடு மாணவியின் கழுத்தை அறுத்தது தெரியவந்துள்ளது. காமுக கொடூரனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Chidambaram girl Student Murder attempt by One Side Love Criminal Teacher


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->