மாரடைப்பால் உயிரிழந்த மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிரவன் ஐ.ஏ.எஸ். இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் மூலம், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் என்று பல பொறுப்புகளில் இருந்து வந்தார். பலமுறை பதவி உயர்வும் பெற்றுள்ளார். 

இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாத் தொற்றில் சிறப்பாக பணியாற்றினார். 

அப்போது அவருக்கு கொரோனாத் தொற்றும் ஏற்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். சமீபத்தில் இவருக்கு தமிழக அரசு சார்பில் நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சியர் கதிரவன் இன்று காலை நடைபெயர்ச்சி மேற்கொண்டிருக்கும் பொது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இவரின் இந்த எதிர்பாராத உயிரிழப்பிற்கு பல மாவட்ட ஆட்சியர்களும் பொதுமக்களும், தங்களது இறங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மாநிலத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழக சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin condoles to death IAS officer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->