கஞ்சா வளர்ப்பு - தூத்துக்குடியில் 4 பேர் கைது.!!
4 peoples arrested for kanja making in thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் உப்பளப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,

இதையடுத்து போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா, கஞ்சாவை புகைக்கும் இரண்டு பைப், 40 பாக்கெட் ஸ்வாகத் போதை புகையிலை மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 peoples arrested for kanja making in thoothukudi