#தமிழகம் || கல்லூரி சுவர் அருகே பட்டகத்தி, காலி மதுபாட்டில்.! ஒரே கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக மோதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மாணவர்களிடமிருந்து பட்டாக் கத்திகள், காலி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கற்களாலும், கையாளும் நேற்று ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது போலீசார் வரவே, சம்பவ இடத்தை விட்டு மாணவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இந்த மோதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி மதில் சுவர் அருகே 8 பட்டாக்கத்திகளையும், காலி மது பாட்டில்களையும் மாணவர்கள் பதித்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பூந்தமல்லி மற்றும் திருத்தணியில் இருந்து மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI PACHAIYAPPA COLLEGE STUDENT CLASH MAY


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->