சென்னையை அதிரவைத்த கொரோனா பாதிப்பு.!
chennai iit corona count
கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று, மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மக்கள் முககவசம் அணிவதை கைவிட்டுதன் காரணமாகத்தான் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நி
லையில், சென்னை கிண்டி ஐஐடி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா நோய் தொற்றும், 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்து, பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய் தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.