சற்றுமுன் | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்றுக் கொண்டு தமிழகத்தில் குட்கா விற்பனையை அனுமதித்ததாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ கால அவகாசம் கோரியதால், இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குட்கா கிடங்கு உரிமையாளர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஏழு பேர் மீது, கடந்த 2021 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதில் அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனுமதி கோரப்பட்டது.

இதில், ஐபிஎஸ் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தற்போதைய தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடமும், குற்றப்பத்திரிகை தகவல் செய்வதற்கு கொடுத்த விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் 11வது முறையாக சிபிஐ கால அவகாசம் கோரியது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC CBI Case C vijayabaskar Gutka case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->