முதல்வன் பட அர்ஜுன் போல அதிரடி உத்தரவை பிறப்பித்த ககன் தீப் சிங்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிவறைகளை வைத்திருந்த துப்புரவு பணியாளர்களின் மேலாளரை பணியில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று, சுகாதார செயலாளர் ககன் தீப் சிங் உத்தரவு பிறப்புத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிவறைகளில் சுகாதாரக் கேடு இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில், பராமரிக்கப்படாமல், நோயாளிகள் அதனை பயன்படுத்த முடியாத வகையில் இருப்பதாக, பொதுமக்களும், நோயாளிகளும் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரச் செயலாளர் கக்கன் தீப் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையின் கழிவறையில் கதவுகள் இல்லாததும், போதிய வெளிச்சம் இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் கழிவறை முழுவதும் பராமரிப்பில்லாமல், சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ககன் தீப் சிங், துப்புரவு பணியாளர்களின் மேலாளரை அழைத்து கடுமையாக திட்டினார்.

தொடர்ந்து இந்த வேலைக்கு நீங்கள் தகுதி இல்லை என்று கூறி, இந்த பணியில் இருந்து உடனே நீங்கள் வெளியேற வேண்டும் என்று ககன் தீப் சிங் உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Govt Hospital Toilet issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->