தமிழிலும் CAPF தேர்வு | அறிவிப்பை வெளியிட்ட அமித் ஷா!
CAPF Exam in Tamil Also
CAPF தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டும் இன்றி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மூன்றாம் தேதி சிஏபிஎப் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 15 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. மத்திய அரசு முடிவால் காவலர் பணிவுக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிஏபிஎப் தேர்வை இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடா, தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்காணி ஆகிய மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்களின் தனித்திறமையும், அவர்களுடைய தேர்வு முடிவுகளும் மேலும் மேம்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.