சிக்கிய திமுக புள்ளிகள் - திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் - அடுத்தடுத்த டிவிட்!
BSP Armstrong case BJP Leader question DMK VCK Congress
கடந்த 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மொன்று பேர் திமுக நிர்வாகிகள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கொலை குற்றவாளி திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய திருவேங்கடம், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட, தற்பாதுகாப்பிற்கு போலீசார் திருப்பி சுட்டதில் திருவேங்கடம் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவின் தொடர்பை மறைக்கவும், உண்மை குற்றவாளிகளை காப்பற்றவும் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சிக்கியுள்ள திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் எப்போது வாய் திறப்பார்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த டிவிட்டை பகிர்ந்துள்ள பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, "பாஜகவை ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புபடுத்தி பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்பதோடு, திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BSP Armstrong case BJP Leader question DMK VCK Congress