ஈடில்லா அக்கா- தம்பி பாசம்! சட்டென்று போன உயிர்! அக்காவிற்கு விளைந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தம்பியின் பிரிவை தாங்க முடியாமல் அவரது நெஞ்சிலேயே அக்காவின் உயிரும் பிரிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகமடைய செய்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர் வேணுகோபால். இவர் அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார் என்று தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மயங்கி விழுந்த அவர் மரணம் அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவரது அக்கா  பேரூர் பகுதியில் இருந்து வந்திருக்கிறார். தம்பியின் இறந்த உடலை பார்த்து கதறி அழுத அவர்  தம்பியின் மார்பின் மீது மயங்கி விழுந்துள்ளார்.

 இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அவரின் மார்பின் மீது அக்காவின் உயிரும் பிரிந்த சம்பவம்  அப்பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother affection which is not separated even in death. Sister died on her brother chest in Kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->