நடிகர் அஜித், ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை!
bomb threat ajithkumar home Chennai
சமீபகாலமாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் சமூக வலைதளங்கள் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (Email) மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த மிரட்டலில், சென்னையில் உள்ள பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிரட்டப்பட்ட பிரபலங்கள்:
நடிகர் அஜித்குமார் வீடு
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடு
நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் எஸ்.வி. சேகர் வீடு
சோதனை : இந்த மிரட்டலைத் தொடர்ந்து, காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
நீண்ட நேர சோதனைக்குப் பின்னர், இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
bomb threat ajithkumar home Chennai