மது விற்பனையில் புதிய உச்சம்.. "வியப்பதா..? வெறுப்பதா?".. அன்புமணி ராமதாஸ் காட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனைக்காக அரசு சார்பில் 5,329 சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 

அப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டார்.

அதில் கடந்த 2003-2004ஆம் நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 3639.93 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைத்துள்ளது எனவும் நடப்பு நிதியாண்டான 2022-2023 ஆம் நிதி ஆண்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 44,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் வரலாற்றில் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையானது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த புள்ளி விவரத்தின் படி கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் 8,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த புள்ளிவிபரம் பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு வளர்கிறது....! மதுவிற்பனை மூலம்  கடந்த ஆண்டு வருமானம் ரூ.36,050 கோடி. நடப்பாண்டின் வருமானம்  ரூ.44,098 கோடி. வியப்பதா.... வெறுப்பதா?" என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani questioned on increase in Tasmac liquor sales


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->