அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் | கூலி படையுடன் கைது செய்யப்பட்ட சுரேந்தர்!
aiadmk counselor thiruvallur case
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரின் மகன் கடத்தப்பட்டனர்.

வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா அவரது மகன் ஜேக்கப் காரில் கடத்தி செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வீட்டில் இருந்த அதிமுக பெண் கவுன்சிலர் அவரது மகன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்று இரவு, கடத்தல் கும்பலிடமிருந்து இருவரும் தப்பி வீடு வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தில் ஆந்திர கூலிப்படையை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரேந்தர் என்பவர் நிலத்தகராறில் ஆந்திர கூலிப்படை உதவியுடன் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்தும் ஒரு கை துப்பாக்கி, கத்தி, சவரன் தங்கநகை உள்ளிட்டவைகளை பி;போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
aiadmk counselor thiruvallur case