பாஜகவில் எஸ்பி வேலுமணி? ஒரே டிவிட்டில் அதிகாரபூர்வ செய்தி!
ADMK SP Velumani Controversy
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாஜகவில் சேர உள்ளதாக ஒரு வதந்தி வெளியான நிலையில், அதற்க்கு தற்போது ஒரே ஒரு டிவிட் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்பி வேலுமணி.
அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டணி முறிவு விகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வ செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை பாஜக இணையலாம் அல்லது, எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவில் ஒரு அணி உருவாக்கலாம் என்று சிலரால் வதந்தி பரப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்பி வேலுமணி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலத்தில் அதிமுக கொடியுடன் சைக்கிள் பேரணி நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு, "என்றென்றும் அதிமுககாரன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை அதிமுகவினர் பகிர்ந்து வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
English Summary
ADMK SP Velumani Controversy