திருமதி ஆம்ஸ்ட்ராங், பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவா? தமிழக அரசுக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம்! 
                                    
                                    
                                   ADMK Jayakumar Condemn to TNGovt for BSP protest 
 
                                 
                               
                                
                                      
                                            ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொற்கொடி உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
இந்நிலையில், ஆம்ஸ்டராங் படுகொலை செய்யபட்டதற்கு நீதி கேட்டு போராடிய திருமதி ஆம்ஸ்ட்ராங், ஆனந்தன், இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில் ,  "சகோதரர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யபட்டதற்கு நீதி கேட்டு போராடிய திருமதி ஆம்ஸ்ட்ராங்,பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது!
இன்னும் சில நாட்களில் தனது திரைப்படம் வெளியாகவுள்ள சூழலிலும் அச்சமின்றி இயக்குநர் ரஞ்சித், நடிகர் தீனா போன்றோர் நியாயம் கேட்டு களத்தில் நிற்கின்றனர்!
அனைவரின் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK Jayakumar Condemn to TNGovt for BSP protest