65 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! செந்தில் பாலாஜியால் வெளிவந்த உண்மை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
ADMK Edppadi palanisami press meet 22052023
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை ஆளுநர் பரிசினை செய்வதாக கூறி இருக்கிறார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி, போலி மதுபானம் அருந்தி உயிரிழப்புக்கு பிறகு, அடுத்த இரண்டு நாட்களில் 1600 பேரை கைது செய்துள்ளார்கள். 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படி என்றால் ஏற்கனவே கள்ளச்சாராயம் விற்பதும், போலி மதுபானம் விற்பதும் தமிழக அரசுக்கு தெரிந்தே இருக்கிறது. காவல்துறைக்கும் தெரிந்தே இருக்கிறது. அப்படி தெரிந்து இருக்கிற காரணத்தினால் தான், உடனடியாக இவர்களால் 1600 பேரை கைது செய்திருக்க முடியும்.

முன்பு இருசக்கர வாகனத்தில் செயின் பறிப்பு செய்த ரவுடிகள் தற்போது காரில் வந்து நவீன முறையில் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
ரவுடிகளும், கொள்ளைக்காரர்களும், குற்றவாளிகளும் காவல்துறை கண்டு பயப்படுவதே கிடையாது. தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் தானே அவர்கள் பயப்படுவார்கள்.

இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் தற்போது முதியவர்களை குறி வைத்து பல இடங்களில் பணத்துக்கும், நகைக்கு கொலை செய்து வருகிறார்கள். ஒரே மாதிரியாக நடக்கிறது. இந்த கொலைகள் குறித்து சட்டமன்றத்தில் நான் புகைப்படத்தை எடுத்துக் காட்டினேன். உடனே முதலமைச்சர் எழுந்து நீங்கள் எப்படி அனுமதி இல்லாமல் புகைப்படத்தை காட்ட முடியும் என்று தடுத்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு 65 வயது பெண் இரவு தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். எவ்வளவு ஒரு கொடுமையான செயல் இதெல்லாம்.

அது மட்டும் இல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி தெரிவிக்கிறார். முதலமைச்சர் மார்தட்டி கூறுகிறார். ஆனால், காவல்துறை மானிய கொள்கை விளக்க கோரிக்கை குறிப்பில்,
2020 ஆம் ஆண்டு 31 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு 32 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது.
இந்த விடியா திராவிட மாடல் ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கிறது ஒரே வருடத்தில். இது அனைத்துமே அவர்கள் அளித்த ஆதாரப்பூர்வமான செய்தி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பக்கம் 22 -ல், மதுவிலக்கு அமலாக்க துறையின் சிறப்பான நடவடிக்கை காரணமாக கடந்த 13 வருடங்களாக கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் எந்த இறப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயத்தால் எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த திமுக அமைச்சர் வேண்டும் என்று திட்டமிட்டு எங்களுடைய ஆட்சியில் குறை சொல்கிறார்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
English Summary
ADMK Edppadi palanisami press meet 22052023