சென்னையில் காதலியை தேடி சென்ற காதலன்! 75 அடி பாழுங்கிணற்றில் விழுந்த சோகம்!  - Seithipunal
Seithipunal


நடுராத்திரியில் சென்னை  அம்பத்தூர் பகுதியில் காதலியை பார்க்க சென்ற காதலன்,  சுவர் ஏறி குதித்து 75 அடி ஆழமுள்ள பாழும் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு, சென்னை  அம்பத்தூர் பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக  கடைகள் திறக்கப்படாததால் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் வேலை பார்க்கும்  கடைக்கு வரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய ஜிலான், திடீரென காதலியின் வீட்டருகே வந்தபோது அவருக்கு காதலியின் ஞாபகம் வந்துள்ளது. 

அவர் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்தபோது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திருடன் என நினைத்து கூச்சலிட்டுள்ளனர். அதனால் பயந்து  செய்வதறியாது திகைத்த ஜிலான், அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்து, இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல், 75 அடி ஆழமுள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் விழுந்து வசமாக மாட்டிக்கொண்டார். 

பராமரிக்கப்படாத  கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து சத்தம்போட்டு உதவி கேட்டுள்ளார். காதலனின் கூச்சலை கேட்ட காதலி மற்றும் அவரின் பெற்றோர் வந்து பார்க்கும்போது ஜிலான்  பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் செல்ல, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து மீட்டனர். உடலில் அதிகமான உள்காயங்களுடன் மீட்கப்பட்ட ஜிலான் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நள்ளிரவில் காதலியைப் பார்ப்பதற்காக வந்த இளைஞர் பாழுங்கிணற்றில் விழுந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a boy fall 75 feet well


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal