புதுக்கோட்டையில் பெரும் சோகம்.. குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலி..!!
3 people including 2 girls died in Pudukottai
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மயிலாத் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகாந்த் அவருடைய மனைவி மற்றும் மகள்கள் அக்ஷயா, தனலட்சுமி ஆகியோர் கிடாவெட்டு திருவிழாவுக்காக வந்துள்ளனர்.
அப்பொழுது அக்ஷயா, தனலட்சுமி ஆகிய இருவரும் பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது அக்ஷயா குளத்தில் தவறி விழுந்ததால் காப்பாற்ற சென்ற தனலட்சுமி தவறி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அவருடைய சித்தப்பா ஆனந்தகுமார் காப்பாற்ற சென்ற பொழுது அவரும் குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட கிராம மக்கள் மூவரையும் காப்பாற்ற முயற்சித்து உள்ளனர். இருப்பினும் மூவரும் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 people including 2 girls died in Pudukottai