விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - காரணம் என்ன?
vilupuram to tirupathi express cancelled till june 3
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயிலும் இன்று முதல் வரும் ஜூன் 3-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று முதல் வரும் ஜூன் 3-ந்தேதி வரையில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று முதல் வரும் ஜூன் 3-ந்தேதி வரையில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக திருப்பதியில் இருந்து இன்று முதல் வரும் ஜூன் 3-ந்தேதி வரையில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
vilupuram to tirupathi express cancelled till june 3