சர்க்கரை ஆலை மற்றும் நூற்ப்ஆலைகளின் தற்போதைய நிலவரம்..துணைநிலை ஆளுநர் ஆதிகாரிகளுக்கு புதிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் நூற்ஆலைகளின் தற்போதைய நிலவரத்தை முன்னிறுத்தி துறை அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோருடன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அதிகாரிகளுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். 

கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு லிங்காரெட்டிப் பாளையம் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் திருபுவனை புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், கூட்டுறவுத்துறைச் செயலர் ஜெயந்த குமார் ரே, கூட்டுறவுத் துறை பதிவாளர் யஷ்வந்தையா, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் நூற்பாலையின் தற்போதைய நிலைமை, அவற்றை இயக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவற்றுக்கான காரணங்கள் போன்றவற்றை துணைநிலை ஆளுநர் கவனமாகக் கேட்டறிந்தார். ஊழியர்களின் எண்ணிக்கை, கரும்பின் தரம், மூலப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல், அவற்றின் விலை உயர்வு, சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை காரணங்களாக அதிகாரிகள் முன்வைத்தனர்.

கூட்டத்தில், துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். 

• ஆலைகளின் தற்போதைய நிலவரத்தை முன்னிறுத்தி துறை அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோருடன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

• தற்போது ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலை மற்றும் காரணங்களை முறையாக ஆராய்ந்து அதற்கான தீர்வு காண முயற்சிக்க வேண்டும். 

• காலம் கடக்கும் நிலையில், நிர்வாகத்திற்கு இழப்புகள் அதிகரித்துக் கொண்டே போவதால் அரசின் நிதிச் சூழலை கருத்தில் கொண்டு சீரிய முடிவை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Current status of sugar mills and hundred mills Deputy Governors new directive to officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->