வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரிஅருகே  கதவை பூட்டாமல் படுக்கை அறையில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி தனுஷ்.22 வயதான இந்த வாலிபர் சம்பவத்தன்று இரவு  32 வயதுடைய ஒரு  பெண் கோவில் திருவிழாவுக்காக சென்ற கணவரின் வருகையை எதிர்பார்த்து கதவை பூட்டாமல் படுக்கை அறையில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.

இதை கவனித்த வாலிபர் தனுஷ் வீட்டுக்குள் புகுந்து படுக்கை அறைக்குள் சென்று  அந்த பெண்ணின் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அந்த பெண்  தப்பிக்க  சத்தம் போட்டார். ஆனால், அந்த பகுதியில் கோவில் திருவிழா ஒலிப்பெருக்கி வைத்திருந்ததால் பெண்ணின் சத்தம் வெளியே கேட்கவில்லை.

மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அப்பெண்ணை மிரட்டி விட்டு தனுஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதையடுத்து  சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஈத்தாமொழி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் தனுஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் வாயைப் பொத்தி மிரட்டி இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man who sexually assaulted a woman sleeping at home has been arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->