குஷியில் வாகனஓட்டிகள்! இனி சுங்கச்சாவடி கட்டணம் வெறும் ரூ.15 தான்!அமலுக்கு வந்த FASTag வருடாந்திர பாஸ் வசதி!
Drivers in a hurry Now the toll fee is just Rs 15 FASTag annual pass facility has been implemented
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. FASTag வருடாந்திர பாஸ் வசதி இன்று (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாஸ் விவரம்
ஒருமுறை ரூ.3,000 செலுத்த வேண்டும்.
செல்லுபடியாகும் காலம் ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் – எது முதலில் நிறைவடைகிறதோ அதுவரை.
இதன்படி, ஒரு பயணத்தின் சராசரி செலவு ரூ.15 மட்டுமே.
எங்கு பயன்படுத்தலாம்?
இந்த பாஸ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்வகிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலைகள் அல்லது உள்ளூர் சாலைகளில் இது பயன்படுத்த முடியாது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தனியார் பயன்பாட்டு வாகனங்கள் (வெள்ளை எண் பலகை) மட்டுமே.
வணிக வாகனங்களுக்கு இந்த வசதி இல்லை.
புதிய FASTag தேவை இல்லை
ஏற்கனவே FASTag வைத்திருப்பவர்கள் புதியதாக வாங்க தேவையில்லை. தகுதி அளவுகோல்கள் பூர்த்தி செய்தால், வருடாந்திர பாஸ் உங்கள் தற்போதைய FASTag-இல் செயல்படுத்தப்படும்.
செயல்படுத்தும் முறை
-
ராஜ்மார்க்யாத்ரா செயலி அல்லது NHAI இணையதளம் செல்லவும்.
-
உங்கள் FASTag உள்நுழைவு விவரங்களுடன் (மொபைல் எண், வாகன எண்) உள்நுழையவும்.
-
அமைப்பு தானாகவே தகுதி சரிபார்க்கும்.
-
UPI, நெட் பேங்கிங், கார்டு மூலம் ரூ.3,000 கட்டணம் செலுத்தவும்.
-
2 மணி நேரத்திற்குள் பாஸ் செயல்படுத்தப்படும்.
-
SMS / மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தல் வரும்.
முக்கிய குறிப்பு
பாஸ் மாற்றத்தக்கது அல்ல; பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கே மட்டுமே செல்லுபடியாகும்.
200 பயணங்கள் முடிந்தவுடன் அல்லது ஒரு வருடம் நிறைவடைந்ததும், உங்கள் FASTag மீண்டும் சாதாரண முறைக்கு மாறும்.
தொடர்ந்து சலுகையைப் பெற விரும்பினால், மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள், இந்த FASTag வருடாந்திர பாஸ் மூலம் செலவைக் குறைத்து, சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் சிரமத்தையும் தவிர்க்கலாம்.
English Summary
Drivers in a hurry Now the toll fee is just Rs 15 FASTag annual pass facility has been implemented