வடலூர் வள்ளலார் கோவிலில் நடிகர் சிம்பு வழிபடு.!!
actor simbu pray in vadalur vallalar temple
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இதற்கிடையில், இன்று காலை இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு "அரசன்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் வள்ளலாரை நடிகர் சிலம்பரசன் வழிபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
actor simbu pray in vadalur vallalar temple