பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம்.. சச்சின் டெண்டுல்கருடன் முன்னெடுக்கும் தனிஷ்க்!
A scheme to exchange old gold jewelry Dhanishh carries it forward with Sachin Tendulkar
சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்துள்ளார்.
பழைய நகைகளை மாற்றுவதை ஒரு தேசிய பழக்கவழக்கமாக ஆக்குவதற்கு முதல் முறையாக 0% பிடித்தத்துடன் பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை அறிமுகம் செய்கிறது
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பது இதன் நோக்கமாகும். இந்தியாவின் உண்மையான தங்க இருப்புகள், தங்கச் சுரங்கங்களில் இல்லை. மாறாக, நாடெங்கிலும் உள்ள இந்திய மக்களின் வீடுகளில் தான் அவைகள் இருக்கின்றன. இந்திய இல்லங்களில் மட்டும் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த பிரமாண்டமான சொத்தும், வளமும் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே வேறு ஆதாயப்பலன்களை வழங்காமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. இதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தேவையில் ஏறக்குறைய 99% என்ற அளவிற்கு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுயசார்பு என்ற நம் நாட்டின் குறிக்கோள் இலக்கை அடைவதற்கான பயணத்தின் வேகத்தை இந்த இறக்குமதி தங்கத்தின் மீதான சார்ந்திருப்பு மெதுவாக்குகிறது. இந்த முரண்பாடுக்கு தீர்வு காணும் விதத்தில் தங்களிடம் ஏற்கனவே இருக்கின்ற தங்க ஆபரணங்களின் மதிப்பை வெளிக்கொணருமாறு குடும்பங்களை தனிஷ்க் ஊக்குவிக்கிறது; பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது.
நாட்டின் நலன் சார்ந்த இந்த குறிக்கோளை வலுப்படுத்துவதற்காகவும், இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தவும் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப்படுகின்ற பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. 2025 அக்டோபர் 21-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 KT என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ய (0%*) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. தேச நலன் மீது அக்கறையுடன் சுயசார்பை ஆதரிக்கும் இந்த சிறப்பான முயற்சியில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை இத்திட்டத்தின் மூலம் தனிஷ்க் எளிதாக்கியிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக, தனிஷ்க் - ன் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்று ஏறக்குறைய 1.7 இலட்சம் கிலோ தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கின்றனர். தனிஷ்க் பிராண்டின் மொத்த பிசினஸில் 40% இந்த சக்தி வாய்ந்த பரிமாற்ற இயக்கத்தின் மூலம் இப்போது முன்னெடுக்கப்படுகிறது.
டைடன் கம்பெனி லிமிடெட் - ன் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. அஜாய் சாவ்லா கூறியதாவது: “ஒரு குடும்பமானது, பூட்டப்பட்டு வைத்திருந்த ஒரு கிராம் தங்கத்தை மாற்றுகின்ற ஒவ்வொரு முறையும் தங்களுக்காக அதிகரித்த மதிப்பை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்க இறக்குமதியின் அளவைக் குறைப்பதன் வழியாக தேசத்தின் நலனிற்கும், சுயசார்பிற்கும் பங்களிப்பை வழங்குகின்றனர். பழைய தங்க நகைகளை மாற்றுவதன் ஆற்றல் அபரிமிதமானது; தனிப்பட்ட மகிழ்ச்சியோடு, தேச நலனிற்கு ஆதரவளிக்கும் தாக்கமும் ஒன்றாக இதில் இணைந்திருக்கிறது. பல்வேறு வகை கேரட்டேஜ்களிலும் (9 KT போன்ற மிக குறைவானதிலும் கூட) இந்த பண்டிகை காலத்திற்காக முதன்முறையாக நாங்கள் வழங்கும் 0% பிடித்தம் என்ற சலுகைத் திட்டத்தின் மூலம் நமது நாட்டை சுயசார்புள்ளதாக மாற்றும் மகத்தான இலட்சிய திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை நாங்கள் மிக எளிதானதாக ஆக்குகிறோம்.”
கிரிக்கெட் ஜாம்பவான் திரு. சச்சின் டெண்டுல்கர் இது குறித்து கூறியதாவது: “ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒருங்கிணைந்த ஒன்றாக தங்கம் இருக்கிறது. பல தலைமுறைகளாக அன்புடன் வழங்கப்படும் தங்கம், பரிசாக வழங்கப்பட்டு, இனிய நினைவுகளோடு போற்றப்படுகிறது; அனைத்து குடும்பங்களும் சார்ந்திருக்கும் ஒரு பொருளாதார சக்தியாகவும் இது இருக்கிறது, தனிஷ்க் - ன் தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், இந்த பாரம்பரியத்தை நேர்த்தியாக புதுப்பிக்க ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான வழிமுறையை குடும்பங்களுக்குத் தருகிறது. இந்த ஒவ்வொரு பரிமாற்றமும் கடந்தகால பழைய ஆபரணங்களை, இன்றைய காலத்திற்கேற்ற நவீன வடிவமைப்புகளாக மாற்றுவதோடு, தங்க இறக்குமதிகள் மீது நமது நாடான இந்தியாவை சார்ந்திருப்பதை குறைப்பதனால் ஒரு மிகப்பெரிய இலட்சியத்திற்கும் பங்களிப்பை வழங்குகிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை இந்த தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், ஒவ்வொரு இந்தியரும் பயன்படுத்த வேண்டிய, அதன்மூலம் வெற்றியை தனக்கும், நாட்டிற்கும் சாத்தியமாக்குகின்ற ஒரு சிறந்த முன்னெடுப்பாக இருக்கிறது.”
English Summary
A scheme to exchange old gold jewelry Dhanishh carries it forward with Sachin Tendulkar