லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்கள்.. கையும் களவுமாக சிக்கியது எப்படி?வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. குறிப்பாக இந்த வழியே கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டைத்துரை, மன்னார்காடு, அகழி, சோலையூர் ஆகிய இடங்களுக்கும் அதிகபடியான வாகனங்கள் செல்கின்றன. கனரக வாகனங்களிலும் பொருட்களை எடுத்து செல்லப்படுகிறது. அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் சோதனையானது மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேரளா மாநிலத்தில் தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்திற்கு உரங்களுக்கான கோழி எருவுகளை பல்லடத்தில் இருந்து லாரி மூலம் 27ம் தேதி அனுப்பி வைத்துள்ளார். அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மாங்கரை சோதனை சாவடியில் இருந்த வனக்காப்பாளர் செல்வகுமார் ஆயிரம் ரூபாயில் லஞ்சமும் அதேபோல் ஆனைகட்டி வனசோதனை சாவடியிலும் வனக்காவலர் சுப்ரமணியம் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சமும் பெற்றுள்ளனர். 

இது குறித்து லாரி ஓட்டுநர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரிடம் அந்த ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலையும் உரங்களுக்கான கோழி எருவுகளை எடுத்து செல்வதாகவும் அப்பொழுதும் சோதனை சாவடிகளில் லஞ்சம் பெறுவார்கள் என்று கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்துவிட்டு இரண்டு சோதனை சாவடிகளிலும் சாதாரண உடையில் இருந்துள்ளனர். அப்பொழுது மாங்கரை சோதனை சாவடியில் வன காவலர் செல்வகுமார் இரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெறும்பொழுது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதேபோன்று ஆனைகட்டி சோதனை சாவடியிலும் வனகாவலர் சதீஷ்குமார் என்பவர் லஞ்சம் பெறும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அதே சமயம் சுப்பிரமணியம் அங்கு வந்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரையும் பிடித்தனர்.

இதனை அடுத்து மூவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் பிரபுதாஸ், அறுமுகம் மற்றும் ADSP ராஜேஷ் தலைமையில் 12 பேர் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three forest guards caught taking bribes How were they caught red-handed? Shocking information revealed


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->