ஆவேசம் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா...! 'Surya -47' - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா.இவரால், கடந்த சில திரைப்படங்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.இருப்பினும்,அவர் மீதுள்ள மரியாதை, ரசிகர் கூட்டம், அன்பு, பாசம் என ரசிகர்களுக்கு எப்போதும் குறைந்ததே இல்லை.

இவர் தற்போது ''வெங்கி அட்லூரி'' இயக்கத்தில் 'சூர்யா 46 ' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு மே மாதத்தில் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சூர்யா 'ஆர்.ஜே பாலாஜி' இயக்கத்தில் ''கருப்பு'' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில்,'சூர்யா 47 ' படத்தின் update வெளியாகியுள்ளது. அவ்வகையில்,சூர்யா அடுத்ததாக 'ஆவேஷம்' படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜித்து மாதவன்' இயக்கத்தில் நடிக்கஉள்ளார்.

இதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தையும் முடிவடைந்துள்ளநிலையில்,படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் சூர்யா 'காவல் அதிகாரி' கதாப்பாத்திரத்தில் நடிக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தயாரிப்பை கலைப்புலி எஸ். தனு (V Creations) நிறுவனம் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து மேற்கொள்ள இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இப்போது மலையாளம்… 3 திசைகளிலும் தனது பயணத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கும் சூர்யா, ரசிகர்களிடையே மீண்டும் 'மாஸ் கம்பேக்' தரப்போகிறார் என்பதில் சந்தேகமே கிடையாது! இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surya joins hands director Aavesam Surya 47


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->