திமுக அமோக வெற்றி! தென்காசியில் நடந்த நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக தோல்வி!
Sankarankovil DMK win admk loss
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது.
இதற்கு முன்பு நகராட்சித் தலைவராக இருந்த உமா மகேஸ்வரி, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், இத்தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் கவுன்சிலர் கௌசல்யா போட்டியிட, அதிமுக சார்பில் கவுன்சிலர் அண்ணாமலை புஷ்பமும் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
இருவருக்குமிடையில் கடும் போட்டி நிலவியது. வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கௌசல்யா பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில், அதிமுக வேட்பாளர் புஷ்பம் குறைவான வாக்குகள் பெற்றதால் தோல்வியடைந்தார்.
இதன்மூலம் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக மீண்டும் திமுகவின் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியால் அங்கு திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Sankarankovil DMK win admk loss