ரூ.500 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் திட்டம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
Tamil Nadu government issues order to set up semiconductor project worth Rs 500 crore
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி செலவில் செமி கண்டக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடியும், செமி கண்டக்டர் சோதனை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், செமி கண்டக்டர் உபகரணங்கள் ஒப்புதல் திட்டத்திற்கு ரூ.50 கோடியும், சிறிய அளவிலான செமி கண்டக்டர் சிப் திட்டத்திற்கு ரூ.100 கோடியும், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ.25 கோடி என 05 வகையான திட்டங்களை செயல்படுத்த அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 05 ஆண்டுகளுக்கு ஊதிய வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை பல்லடத்தில் தலா 100 ஏக்கரில் செமி கண்டக்டர் உற்பத்தி இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசின் அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்படுவதோடு, குறித்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள் மேலும், தெரிவித்துள்ளனர்.
English Summary
Tamil Nadu government issues order to set up semiconductor project worth Rs 500 crore