கூலி பட ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய திரையரங்கு உரிமையாளர்கள்...!
Theater owners fulfill demand coolie movie fans
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தற்போது வெளிவந்துள்ள படம் 'கூலி' .இதில் தெலுங்கு நடிகர் 'நாகார்ஜுனா' வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியான நிலையில்,நாகார்ஜுனாவுக்கு தமிழிலும் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதில் கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்நிலையில், படத்தின் இடைவெளியில், நாகார்ஜுனாவின் ஹிட் பாடலை திரையிட ரசிகர்கள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, திரையரங்கு உரிமையாளர்களும் அந்தப் பாடலைப் போட்டு நாகார்ஜுனாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ் நாட்டில் சில பகுதிகளில் 'கூலி' திரையிடப்படும் திரையரங்குகளில் நாகார்ஜுனா நடித்து தமிழில் வெளியான 'ரட்சகன்' படத்திலிருந்து 'சோனியா சோனியா' பாடலை திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் இடைவேளையின்போது அந்தப் பாடலை போட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.இதில் கூலி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
. இதுவரை இப்படம் மொத்தமாக ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Theater owners fulfill demand coolie movie fans